ETV Bharat / state

’ஹலோ நான் அமைச்சர் ஜெயக்குமார் பேசுறேன்’ - பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

author img

By

Published : Mar 6, 2020, 10:52 PM IST

சென்னை: அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரைச் சொல்லி ஃபோன் காலில் பண மோசடியில் ஈடுபட்ட நபரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

fakecall
fakecall

கிண்டி சிப்காட் பகுதியில் சிறு தொழிலகம் நடத்திவருபவர் துரைசாமி (61). இவருக்கு நேற்று மாலை ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் பேசிய நபர், தான் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலப்பணிகள் செய்ய இருப்பதால் ரூபாய் 80,000 வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பணம் தர முடியாது என்று கூறிய துரைசாமி, பின்னர் 30,000 ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பணம் கேட்ட அந்த நபர் வங்கிக்கணக்கு அனுப்பி வைத்தார். அதனை சோதனை செய்து பார்த்தபோது முகமது ரஃபிக் என்பவரது பெயரில் அக்கணக்கு இருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த துரைசாமி, அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு நேரடியாக ஃபோன் செய்து கேட்டபோது, அமைச்சர் ஜெயக்குமார் பேசவில்லை என உறுதியானது.

அமைச்சர் பெயரைச் சொல்லி யாரோ மோசடியில் ஈடுபட ஃபோன் செய்திருப்பதும் அவருக்கு தெரியவந்தது. இதன்பேரில் கிண்டி காவல் நிலையத்தில் துரைசாமி புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வங்கிக்கணக்கு எண்ணை வைத்து வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது ரஃபிக் (50) என்பவரை கைது செய்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இடங்களில் இதேபோல் ஃபோன் செய்து பல அமைச்சர்களின் பெயரைக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக இவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: பெண்ணிடம் அவதூறாகப் பேசிய நகராட்சிப் பணியாளர் - புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.