சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (ஆக. 27) 174 பயணிகளுடன் துபாய் செல்ல தயாராக இருந்தது. அந்த நேரத்தில் சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அப்போது ஒருவர் துபாய் செல்லவிருக்கும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில், வெடி குண்டுகளுடன் ஒரு பயணி இருப்பதாக தெரிவித்து இணைப்பை துண்டித்தார். இதனடிப்படையில், போலீசார் சென்னை விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பின் விமான நிலையை வெடிகுண்டு நிபுணர்கள் அந்த விமானத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகள் கிடைக்கவில்லை. பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து, சென்னை மணலியை சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய தங்கையும், தங்கை கணவரும் அந்த விமானத்தில் துபாய் செல்லவிருந்ததாகவும், இதனிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாகவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: அரும்பாக்கம் கொள்ளை சம்பவம்.. அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தாக்கல்