சென்னை திரு.வி.க.நகர் 21ஆவது தெருவில் தனசேகரன்(57), சித்ரா(54) தம்பதியினர் வசித்து வந்தனர். தனசேகரனின் சகோதரர் சோமு என்கிற கிருஷ்ணகாந்த் (52), இவர்களது வீட்டின் பின்புறத்தில் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக அண்ணன், தம்பி இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (மே 29) தனசேகருக்கும் அவரது சகோதரர் கிருஷ்ணகாந்த்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கிருஷ்ணகாந்த் அவரது அண்ணன் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். உடனடியாக, அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவரது மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் திரு.வி.க நகர் காவல்துறையினர் கிருஷ்ணகாந்தை கைது செய்தனர். பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தகாத உறவை கண்டித்த கணவரை வாழைக்கு உரமாக்கிய மனைவி