சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம்(45). இவரது மனைவி பழனியம்மாள், மகன் பிரகாஷ் (21). ஆறுமுகம் கட்டட வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு ஆறுமுகம் மது அருந்தி வீட்டிற்கு வந்து பழனியம்மாளிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, தாய் அடித்து துன்புறுத்துவதை பிரகாஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் சாம்பார் வைக்க அடுப்பில் வேக வைத்திருந்த பருப்பை எடுத்து பிரகாஷின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பிரகாஷை மீட்டு கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது 40 விழுக்காடு தீக்காயத்துடன் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கொதிக்க வைத்திருந்த பருப்பை முகத்தில் ஊற்றிவிட்டு தப்பிச் சென்ற தந்தை ஆறுமுகத்தை சங்கர் நகர் காவல் துறையினர் கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பல கோடி ரூபாய் சேமிப்பு: காரணம் கொரோனாதான்!