ETV Bharat / state

நடிகர் செந்திலிடம் மோசடி செய்தவர் கைது - Actor Senthil Building For Rent

சென்னை: நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Man arrested defrauding actor Senthil, நடிகர் செந்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் கைது
author img

By

Published : Nov 2, 2019, 9:44 AM IST

சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது.

இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து "சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்" நடத்திவந்தார்.

இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை கொடுக்கவில்லை என்று தெரிய வருகிறது. மேலும் அந்த கட்டடத்தில் உள்ள ஏழு அறைகளை குத்தகை, வாடகைக்கு விட்டு சகாயராஜ் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக நடிகர் செந்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சகாயராஜை கைது செய்தனர். சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ம.பி. பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய கோவை இளைஞர்!

Intro:Body:நடிகர் செந்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் கைது.

சாலிகிராமம் பாஸ்கர் காலனி 3வது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது இதில் மொத்தம் 10அறைகள் உள்ளது இதை கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் வயது52 என்பவர் மாதம் ரூ.இரண்டரை லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து "சர்வீஸ் அப்பார்ட்மென்ட்" நடத்தி வந்தார் இந்த நிலையில்  சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தரவில்லை தொடர்ந்து வாடகை தராமல்  காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த செந்தில் வீட்டை  நேரில் சென்று பார்த்தார் அப்போது அந்த கட்டிடத்தை தனது சொந்த கட்டிடம் எனக்கூறி சகாயராஜ் அதில் உள்ள 7 அறைகளை லீஸ் மற்றும் வாடகைக்கு விட்டு ஓப்பந்தம் போட்டு அவர்களிடம் பணம் பெற்றுள்ளதும் தெரியவந்தது  

இதுகுறித்து செந்தில் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தினி மற்றும் போலிசார் தலைமறைவாக இருந்த சகாயராஜை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சகாயராஜ் சினிமா துறையில்  புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.