ETV Bharat / state

பெசன்ட் நகரில் கருகிய நிலையில் ஆண் சடலம் - போலீசார் விசாரணை! - sashtrhi nagar police

சென்னை: பெசன்ட் நகரில் சாலையோரமாக கருகிய நிலையில் சடலமாகக் கிடந்த ஆண் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெசன்ட்
சென்னை
author img

By

Published : May 29, 2021, 1:37 PM IST

சென்னையில், கடந்த மே 21ஆம் தேதி அன்று மாலையில் பல இடங்களில் மழை பெய்தது. அப்போது பெசன்ட் நகர் வழியாகச் சென்ற வாகன ஓட்டி, அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நபரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அதுகுறித்து, சாஸ்திரி நகர் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளார். காவல் துறையினர், அந்த உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார் என்பது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேரமா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அவ்வழியே கையில் பையுடன் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சி

சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து, தமிழ்நாடு முழுவதும் காணாமல் போன நபர்களின் பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்ததிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்த நபர் குறித்த விவரங்கள் தெரிந்தால் சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.