ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு - சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர்

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்குத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

chennai high court Newly appointed judges swearing ceremony  தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் Newly appointed judges take oath as additional Judge of madras high court  சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர்

author img

By

Published : Mar 28, 2022, 3:35 PM IST

சென்னை: இந்தியாவில் உள்ள பழமையான, மிகவும் முக்கியமான உயர் நீதிமன்றங்களில் ஒன்றாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்ந்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 75 நீதிபதிகள் வரை பணியாற்ற முடியும் என்கிற சூழல் நிலை இருந்த போதிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வரை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சேர்த்து மொத்தம் 59 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதனிடையே, உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் என்.மாலா, சுந்தர்மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ்.சவுந்தர், அப்துல் கனி அப்துல் அமீது, ஆர்.ஜான் சத்தியன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு (கொலிஜியம் ) மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதிகாக என்.மாலா, சவுந்தர் ஆகியோரை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஆணை பிறப்பித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

இதையடுத்து, இருவரும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இன்று (மார்ச் 28) பதவியேற்றனர். இவர்களுக்குத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 2 ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு, 2 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார்

புதிய நீதிபதிகளை அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவி லூயிசாள், லா அசோசியேசன் தலைவர் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

நீதிபதி என்.மாலாவின், தந்தை மகாகவி ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ் என்ற ஸ்ரீ ஸ்ரீ, தாயார் சரோஜா ஸ்ரீ ஸ்ரீ. பள்ளிப் படிப்பைச் சென்னையில் உள்ள செயின்ட் ஜான் மற்றும் கேசரி பள்ளிகளிலும், சட்டப்படிப்பைச் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் படித்தார். 1989-ம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தீர்ப்பாயங்களில் ஏராளமான வழக்குகளில் ஆஜராகித் திறம்பட வாதாடியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு பிளீடராக நியமிக்கப்பட்டார். இவர்தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் வக்கீல் ஆவார். இதுதவிர புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் ஆஜராகியுள்ளார். நீதிபதி என்.மாலாவின் கணவர் ராதா ரமணா, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்ரீனிவாஸ் ஜெயபிரசாத் வழக்கறிஞராக உள்ளார்.

நீதிபதி எஸ்.சவுந்தர்: நீதிபதி எஸ்.சவுந்தர், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். 1971-ம் ஆண்டு பிறந்த இவரது பெற்றோர் வழக்குரைஞர் ஆர்.சிவபுண்ணியம்-சிந்தாமணி ஆவர். மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1993-ம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்த இவர், சத்தீஷ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசல மூர்த்தியிடம் ஜூனீயராக பணியாற்றியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஏராளமான சிவில், கிரிமீனல் வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமியில் பல்வேறு சட்டங்கள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

இவரது மனைவி பிருந்தா எம்.டெக். பட்டதாரி. மகன் சச்சின் இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். புதிய நீதிபதிகள் நியமனத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர் பி.முத்துக்குமார், குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எனக்கு எதிராக வெளிநாட்டு சதி.. கதறும் இம்ரான் கான்!!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.