ETV Bharat / state

சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடக்கம்: மனு கொடுத்தால் அப்டேட்டை தெரிஞ்சுக்கலாம்!

சென்னையில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், மக்களைத் தேடி மேயர் என்ற திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

Chennai Mayor
சென்னை மேயர்
author img

By

Published : May 3, 2023, 3:25 PM IST

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டார அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாகப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக திட்டத்தை ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களைத் தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாலைப் பணிகள், மழைநீர் வடிகால், பூங்கா சீரமைப்பு, பிறப்பு - இறப்புச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் நேரடியாக மனு அளிக்கலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணப்படும். கோரிக்கை மனு அளிக்கும்போது ஒப்புகைச் சீட்டு தரப்படும். அதில் ஒரு லிங்க் உள்ளது. அதைப் பயன்படுத்தி கோரிக்கை எந்த நிலையில் உள்ளது? யார் அதற்கு பொறுப்பு? உள்ளிட்ட தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது இந்தத் திட்டம் மண்டலம் ஐந்தில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும். சாலைப் பணிகள் பல்வேறு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.

இதற்கு முன்பு மண்டல வாரியாக என்ன பிரச்னை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அதிகாரிகளைச் சந்தித்தேன். தற்போது மக்கள் பிரச்னையை நேரடியாக என்னிடம் தெரிவிப்பதற்கு, மக்களைத் தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, துணை மேயர் மகேஷ் குமார், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் சுவர் இடிந்து விபத்து - முதியவர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.