ETV Bharat / state

தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் தேவை - கமல்ஹாசன் - etv bharat

தமிழ் மொழி வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
author img

By

Published : Jul 20, 2021, 12:54 PM IST

சென்னை: இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான முயற்சிகளுக்கு பின் 2004 ஆம் ஆண்டு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி.

பெரிதாக ஒன்றும் இல்லை

செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகளாகிவிட்டன. மொழி வளர்ச்சிக்கு என நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என கறாராக தொகுத்து பார்த்தால், பெரிதாக ஒன்றும் இல்லை.

ஆபத்தில் பிறமொழிகள்

பலமொழிகளில் நடித்த பிறகுதான் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பதை முழுதாக உணர்ந்தேன். ஆங்கிலத்தைத் தவிர பிறமொழிகள் ஆபத்தில் உள்ளன.

தமிழ் ஆட்சி மொழி

1956 இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவது, தமிழ் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்டவை இன்னும் முடுக்கி விடப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.

தனி அமைச்சகம்

இவை போன்ற பெரும் முயற்சிகளை தனிக்கவனம் செலுத்தி மேற்கொள்ள தமிழ் மொழி வளர்ச்சிக்கு என தனி அமைச்சகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படும்- சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.