ETV Bharat / state

"தேசிய அளவில் பல திட்டமிடல் இருப்பதால் நிர்வாகிகள் நம்பிக்கையோடு இருக்கலாம் " - கமல்ஹாசன் - மநீம நிர்வாகிகள் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாதம் ஒரு முறை பெரிய கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

makkal
makkal
author img

By

Published : Dec 18, 2022, 8:35 PM IST

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(டிச.18) முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 117 மாவட்டச் செயலாளர்கள், 7 நிர்வாகக் குழு உறுப்பினர்கள், 25 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். மாநில அளவில் மாதம் ஒரு முறை கட்சி சார்பில் பெரிய கூட்டங்கள், பெரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு முக்கியம், அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் நெருங்குவதால் நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான நகர்வுகள் நிர்வாகிகள் மத்தியில் தினமும் இருக்க வேண்டும்.

மநீம நிர்வாகிகள் கூட்டம்
மநீம நிர்வாகிகள் கூட்டம்

இந்தியன் என்ற முறையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்கிறேன். நம்பிக்கையாக இருங்கள், தேசிய அளவில் ஒருங்கிணைந்த பல திட்டமிடல்கள் இருக்கின்றன. பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய நாளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் கட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டணி குறித்து சூசகமாக பதிலளித்த கமல்ஹாசன் - வெளியான முக்கிய தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.