ETV Bharat / state

மூதாட்டியிடம் நகைகளை திருடிச் சென்ற பணிப்பெண் கைது - மூதாட்டியிடம் நகைகளை திருடிச் சென்ற பணிப்பெண் கைது

மூதாட்டிக்கு அதிக நீரிழிவு மாத்திரைகளை கொடுத்து நகைகளை திருடிச் சென்ற பணிப்பெணை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியிடம் நகைகளை திருடிச் சென்ற பணிப்பெண் கைது

author img

By

Published : Jan 1, 2023, 12:56 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அடுத்த சிறுசேரி பகுதியில் வசித்து வருபவர் திருமூர்த்தி. இவர், தனது மாமியார் ராஜலட்சுமி (62), என்பவருக்கு உதவியாக இருக்க பணிப்பெண் ஒருவரை பணியமர்த்தினார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மூதாட்டிக்கு அதிக அளவு நீரிழிவு மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்து, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வகையல்களை என 8½ சவரன் தங்க நகைகளை பணிப்பெண் திருடிச் சென்று விட்டார்.

இது குறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் திருமூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து, கே.கே.நகரை சேர்ந்த பணிப்பெண் விஜயலட்சுமி (46), என்பவரை செல்போன் சிக்னலை வைத்து தாழப்பூர் ஆய்வாளர் வேலு நேற்று (டிச.31) கைது செய்தார். அவரிடமிருந்து 8½ சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் பணிப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டு வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது அவர்கள் குறித்த முழு விவரங்கள், மற்றும் குற்ற பிண்ணனிகள் குறித்து தெரிந்துகொண்டு பணியமர்த்த பொதுமக்களுக்கு தாழம்பூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.