ETV Bharat / state

லாட்டரி மார்டின் வழக்கு; பழனிசாமியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க குற்றவியல் நடுவரை நியமிக்க உத்தரவு? - மர்ம மரணம்

சென்னை: லாட்டரி அதிபர் மார்டினின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து குற்றவியல் நடுவர் விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

palanichamy
author img

By

Published : May 17, 2019, 10:41 AM IST

லாட்டரி அதிபர் மார்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மார்டினிடம் உதவியாளராக வேலை செய்யும் கோவையை சேர்ந்த பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மூன்று நாட்களுக்கு பின்னர் அவரது உடல் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பழனிசாமியின் மகன் ரோஹின்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், என் தந்தையின் சாவில் மர்மம் உள்ளது, அவரது முகத்தில் ரத்த காயம் உள்ளது. எனவே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், என் தந்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்துவிட்டனர். எனவே, எனது சார்பில் ஒரு டாக்டர் முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். என் தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சாதி பெயரை சொல்லித்திட்டியதால், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், தண்ணீரில் மூழ்கி இறந்தவரின் முகத்தில் எப்படி ரத்த காயம் வந்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளிக்க போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், ‘மனுதாரரின் தந்தையின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் ஆர்.டி.ஓ முன்னிலையில், 6 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், பழனிசாமி மர்ம சாவு தொடர்பான வழக்கை காரமடை போலீஸிடம் இருந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.பழனிச்சாமி மர்ம சாவு தொடர்பாக போலீஸார் மீதோ, அரசு டாக்டர்கள் மீதோ மனுதாரர் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை. மறுபிரேத பரிசோதனையும் அவசியமில்லை’ என்று கூறினார்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களின் உடலில் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது வழக்கம்தான்’ என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் தந்தை மரணத்தில் மர்மம் உள்ளது என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து அனைத்தையும் விசாரணை நடத்த ஒரு குற்றவியல் நடுவரை கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நியமிக்க வேண்டும். அவர் விசாரணை நடத்தும்போது, சந்தேகம் ஏற்பட்டால், உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடலாம். அப்போதும் மனுதாரர் தரப்பில் ஒரு அரசு டாக்டரை அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பழனிச்சாமியின் உடலை பார்க்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கவேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என உத்தரவிட்டனர்.

Intro:Body:

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மார்ட்டினிடம் உதவியாளராக வேலை செய்யும் கோவையை சேர்ந்த பழனிச்சாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

3 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் தந்தையின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரது முகத்தில் ரத்த காயம் உள்ளது எனவே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், தன் தந்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து விட்டனர். எனவே, தன் சார்பில் ஒரு டாக்டர் முன்னிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். தன் தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சாதி பெயரை சொல்லித்திட்டியதால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், தண்ணீரில் மூழ்கி இறந்தவரின் முகத்தில் எப்படி ரத்த காயம் வந்தது? என்று நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளிக்க போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், ‘மனுதாரரின் தந்தையின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.டி.ஓ. முன்னிலையில், 6 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், பழனிச்சாமி மர்மச்சாவு தொடர்பான வழக்கை காரமடை போலீசிடம் இருந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமி மர்மச்சாவு தொடர்பாக போலீசார் மீதோ, அரசு டாக்டர்கள் மீதோ மனுதாரர் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றத்தேவையில்லை.  மறுபிரேத பரிசோதனையும் அவசியமில்லை’ என்று கூறினார்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களின் உடலில் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது வழக்கம் தான்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் தந்தை மரணத்தில் மர்மம் உள்ளது என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து அனைத்தையும் விசாரணை நடத்த ஒரு மாஜிஸ்திரேட்டை, கோவை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நியமிக்க வேண்டும். அந்த மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தும்போது, சந்தேகம் ஏற்பட்டால், உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடலாம். அப்போது மனுதாரர் தரப்பில் ஒரு அரசு டாக்டரை அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பழனிச்சாமியின் உடலை பார்க்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கவேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என உத்தரவிட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.