ETV Bharat / state

Madurai train fire accident: மதுரை ரயில் பெட்டி தீ விபத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

மதுரை சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில், முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 6:29 PM IST

சென்னை: மதுரை ரயில் பெட்டி தீ விபத்திற்கு, சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சி.பி.ஐ மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் (ஆகஸ்ட் 17) தேதி தமிழகத்திற்கு வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கோயிலுகளுக்கு சென்றுவிட்டு நேற்று(ஆகஸ்ட் 25) நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று(ஆகஸ்ட்26) அதிகாலை 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளதால் சிலிண்டர் வெடித்து தீ பிடித்துள்ளது. சமையல் செய்வதற்காக ரயில் பெட்டியின் ஒருபுறம் உள்ள கதவில் உள்புறம் தாழிடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் அனைவரும் ஒரே பக்கத்தில் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு uள்ளனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீ முழுவதுமாக அணைத்தனர்.

இச்சம்பவத்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " உத்தரப்பிரதேசம் லக்னோவில் இருந்து தனி ரயில் பெட்டி ஏற்பாடு செய்து தமிழ்நாடு வந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் அதிகாலை தீவிபத்து ஏற்பட்ட அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளதும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் பெரும் வேதனையளிக்கிறது” என்றார்.

மேலும், “சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட முறையில் , பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் எப்படி அனுமதிக்கப்பட்டது. அந்த எரிவாயு சிலிண்டரும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2002 பிப்ரவரி 27 கோத்ரா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையும் அதனைத் தொடர்ந்து நடந்த துயரம் மிகுந்த சம்பவங்களும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.”

அதனைத்தொடர்ந்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தென்னக ரயில்வே தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும் ஆறுதல் அளிக்கிறது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்திற்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலத்தில் இளைஞரணி மாநாடு நடைபெறும் என திமுக அறிவிப்பு - எப்போது தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.