ETV Bharat / state

Tirunelveli news: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு - வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்! - மதுரை உயர் நீதிமன்றம்

திருநெல்வேலியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் 150 பக்க வழக்கு கோப்புகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து காவல் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:48 PM IST

மதுரை: திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நெல்லை சந்திப்பு பகுதியில் பால் வாங்க சென்றார். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் ஒரு பகுதி இடிந்து வேல்முருகனின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 தினங்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்று வந்த அவர் மே மாதம் 18ஆம் தேதி சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை சந்திப்பு காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்கள். ஆனால், அதில் எந்த குற்றவாளிகளின் பெயரும் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி வேல்முருகன் தரப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகார்ஜூன், "இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை. இந்த வழக்கு விசாரணை வேண்டுமென்றே காலதாமதப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் குற்றவாளிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை” என கூறி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக நெல்லை சந்திப்பு காவல் ஆய்வாளர் சிபிசிஐடி டிஎஸ்பி இடம் ஒப்படைக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் 150 பக்க கோப்புகள் நெல்லை சந்திப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர், சென்னையில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோப்புகள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்.. பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.