தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழகத்திற்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், தற்போது மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் குடியிரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் நிறைவேற்றியது போல், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அமல்படுத்த வேண்டும்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்பினை நாடு முழுவதும் தடைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
மாணவர்கள் போராட்டம் நடைபெறுவதால், காவல் துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வரும் அனைவரிடமும் அடையாள அட்டை உள்ளதா என்பதை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
இதையும் படிங்க: நகர் ஊரமைப்புத் துறைக்கு தனி அலுவலகம்! நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!