ETV Bharat / state

விதிகளின் படி கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா?...உயர் நீதிமன்றம் கேள்வி! - விதிகளின் படி கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா?...உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறா? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கும், வனத்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்
author img

By

Published : Apr 27, 2021, 5:28 PM IST

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்கள் நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு வனப்பகுதியில், யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையை பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஏப்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளை கோயில் நிர்வாகங்கள் முறையாக பின்பற்றுகிறதா? என அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அலுவலர்களுடன் கடந்த 23ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு, அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மாநில அரசு தேர்தல் ஜூரத்தில் இருப்பதாகக் கூறி, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும், அவற்றை முறையாக நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

யானைகள் மனிதாபிமானத்துடன், கண்ணியமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். யானைகள் புத்திசாலியான விலங்கு எனவும், அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், தனியார் மற்றும் கோயில்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பராமரிப்பது தொடர்பான திட்டவட்டமான கொள்கையை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறா? என்பது குறித்தும், இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையும், வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.