சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்த போரா முஸ்லிம் தம்பதியருக்கு குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.
இதையடுத்து, மனைவிக்கு மாதாந்திர பராமரிப்பு செலவாக 37 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, பராமரிப்பு தொகையை அதிகரிக்கக் கோரி மனைவி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனைவிக்கு உரிமை கிடையாது
இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, போரா முஸ்லிம் ஜமாத் விதிகளின்படி, விவாகரத்தான தகவலை திருமண பதிவேட்டில் கணவன்தான் பதிவு செய்ய முடியும். மனைவிக்கு அந்த உரிமை கிடையாது என்று மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![சென்னை உயர்நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-womenrightsinjamaath-script-7204624_27112021194731_2711f_1638022651_394.jpeg)
இதையடுத்து, போரா முஸ்லிம் மத பழக்க வழக்கத்தைப் பற்றி எந்த ஒரு கருத்தும் கூற விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதி, திருமணம் மற்றும் விவாகரத்து விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது எனக் கூறி, மனைவிக்கு வழங்கப்பட்ட விவாகரத்து குறித்துப் போரா முஸ்லிம் ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : Chennai Rain - பாத் டப்பை படகாக மாற்றிய மன்சூர் அலிகான்