ETV Bharat / state

மீரா மிதுனின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் - Chennai District news

தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீரா மிதுனின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

author img

By

Published : Dec 24, 2022, 11:55 AM IST

சென்னை: நடிகை மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது அதற்கான அரங்கில் தனியார் நிறுவனம் ஒன்றை பிரபலப்படுத்துவதற்காக, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா பட்டங்களை வென்ற என்னிடம் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் 50,000 ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் என் மீது 2019ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று (டிச.24) விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில், ‘நடிகை மீரா மிதுன் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் தற்போது தலைமறைவாகி உள்ள மீரா மிதுன் எங்கு உள்ளார் என தெரியவில்லை. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’பொன்னியின் செல்வன்’ சோபிதா துலிபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.