ETV Bharat / state

வனத்துறை பணிக்கான கல்வித்தகுதி; வனவிலங்கு உயிரியல் படிப்பை 4 வாரங்களில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Forest Department Officers

Madras High Court: தமிழக வனத்துறை அதிகாரிகள் பணிக்கு தகுதியாக, வனவிலங்கு உயிரியல் படிப்பையும் சேர்க்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 12:05 PM IST

சென்னை: தமிழக வனத்துறை பணிகளுக்கான விதிகளில், வனவிலங்கு உயிரியல் படிப்பை நீக்கிய திருத்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் அந்த படிப்பை சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

வனத்துறையில் காலியாக இருந்த 79 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2010ஆம் ஆண்டு அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், வனத்துறையில் உள்ள பணிகளில் சேர்வதற்கு தகுதியாக, வனவியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்த அரசாணையின்படி, முதுநிலை வன உயிரியல் மற்றும் வனவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், 'ரேஞ்சர்' எனும் வனச்சரகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், இது சம்பந்தமான பணிக்கு தகுதியாக, விதியில் திருத்தம் கொண்டு வந்த அரசு, வனவியலை முன்னுரிமை கல்வித் தகுதியாக நிர்ணயித்து, வன விலங்குகள் உயிரியல் படிப்பை நீக்கியது.

இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மீண்டும் கோரிக்கை வைத்த ஸ்ரீதர் வாண்டையார்!

இதனையடுத்து, இந்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரியும், வனவியல் பட்டப்படிப்புடன் மீண்டும் வனவிலங்குகள் உயிரியல் படிப்பை விதிகளில் சேர்க்க கோரியும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வன உதவி பாதுகாவலர் பணியிடத்துக்கு வனவியல் பட்டப் படிப்பு மற்றும் முதுகலை வனவிலங்குகள் உயிரியல் படிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை பணி விதிகளில், முதுநிலை வன உயிரியல் படிப்பை சேர்க்காதது, பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

எனவே, வனத்துறை பணி விதிகளில், வனவிலங்கு உயிரியல் படிப்பை நீக்கிய திருத்தத்தை ரத்து செய்து, வனவிலங்குகள் உயிரியல் படிப்பையும் முன்னுரிமை படிப்பாக நான்கு வாரங்களில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மாநகரை மிரட்டும் மாடுகள்.. தொடர் விபத்தால் பொதுமக்கள் அச்சம்.. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.