ETV Bharat / state

எடப்பாடிக்கு எதிரான டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கின் இடைக்கால தீர்ப்பு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என லஞ்ச ஒழிப்புதுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

eps tender scam
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் முறைகேடு
author img

By

Published : Jul 13, 2023, 6:55 PM IST

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஏற்கனவே தாக்கல் செய்யபட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என்றும், லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது என விளக்கம் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு அதை மீண்டும் ஆராய தேவையில்லை எனவும் வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்புதுறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தார். லஞ்ச ஒழிப்புதுறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கடந்த 2018ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்பு ஆணையர் ஏற்கவில்லை என்றும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துவதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2018 ஆம் ஆண்டு ஆய்வு செய்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில், மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:தமிழில் அறிமுகமாகும் கூகுள் ஏஐ பார்ட்... 40 மொழிகளில் அறிமுகம் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.