ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மகளை கைது செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு - Jayakumar's daughter Jayapradeepa and son-in-law Naveen Kumar seek bail in Chennai High Court

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதுவரை ஜெயக்குமாரின் மகளைகைது செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

madras-high-court-ordered-police-do-not-arrest-jayakumar-daughter-on-land-grabbing-charges நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மகளை கைது செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Mar 24, 2022, 8:18 AM IST

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதனிடையே, ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரதீபா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தான் மைனராக இருந்ததால் தந்தையும், சகோதரர் மகேசும் மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்ததாகவும், தந்தை மறைவிற்குப் பிறகு மகேஷ் குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமார் மகளை கைது செய்யக் கூடாது

மேலும், 6 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் தாமதமாகப் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான வழக்கில், எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரினர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30ம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அதுவரை ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : 'பத்தே பத்து ஜெயக்குமார் கெத்து..!' : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.