ETV Bharat / state

யோகி பாபுவின் படத்தை வெளியிட இடைக்காலத் தடை

நடிகர் யோகி பாபு நடித்துள்ள 'தாதா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோகி பாபுவின் படத்தை வெளியிட இடைக்கால தடை

author img

By

Published : Dec 6, 2022, 10:58 PM IST

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். சினி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாகி துரைராஜன் என்கிற ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது நண்பருடன் இணைந்து ஆர்.ஆர். சினி புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி 'மணி'(Money) என்ற திரைப்படத்தை கடந்த 2016ஆம் ஆண்டு தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யாவும் மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு, நாசர், சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த கிஷோர் குமார் என்கிற கின்னஸ் கிஷோர், தனது தயாரிப்பு நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாக, வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்கை திருடிய வழக்கு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார் .

இந்த சூழலில் 'மணி' படம் தொடர்பான சிவில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்னை தெரசா இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், ஹார்ட் டிஸ்க் மூலம் திருடப்பட்ட அந்த படத்தின் காட்சிகளைக் கொண்டு, 'தாதா' என்ற பெயரில் ட்ரெய்லரை வெளியிட்டு வரும் 9ஆம் தேதி படத்தை வெளியிடப் போவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ’மணி’ பட தயாரிப்பின்போது நிதின் சத்யாவை முன்னிலைப்படுத்தி போஸ்டர்கள் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது யோகி பாபு பிரபலமாகி உள்ளதால் 'தாதா' படத்தில் யோகிபாபுவை முன்னிலைப்படுத்தி போஸ்டர் வெளியிட்டு கின்னஸ் கிஷோர் மோசடி செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, தாதா படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு குறித்து கிஷோர் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதி தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: நடிக்காத படத்திற்கு போஸ்டர்.. பொங்கி எழுந்த யோகி பாபு.. ஆடியோவில் கூறியது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.