சென்னை: கரோனா தொற்றின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று(ஜூன்.7) விசாரணைக்கு வந்தது.
அப்போது , ஏற்கனவே உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.