ETV Bharat / state

போலி சாதிச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்க அரசுக்கு 8 வாரங்கள் அவகாசம் - tamilnadu government

போலி சாதிச் சான்றிதழ்கள் பெறுவது குறித்தான விதிகளை 8 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி சாதிச் சான்றிதழ்கள் பெறுவது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் 8 வாரங்கள் அவகாசம்!

author img

By

Published : Jan 3, 2023, 6:41 AM IST

சென்னை: குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என்று சாதிச்சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு விதிகளை வகுக்கக் கோரி சி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர் சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதிகளை வகுத்துள்ளது. அதன்படி மாநில அளவில் சாதிச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். போலி சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தவும் வேண்டும்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் என பொய் சொல்லி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றமும் இதற்கான விதிகளை வகுத்துள்ளது.

மானுடவியல் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சான்றிதழ்கள் வழங்கக்கூடாது. பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு ஏற்கனவே சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தால், அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மறுக்க முடியாது.

சாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள், அரசாணைகள் அடிப்படையில் 8 வாரங்களில் விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

போலி சான்றிதழ்களை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றவில்லை. அதனால் சாதிச் சான்று வழங்கக்கூடிய அலுவலர்கள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும், தகுதியில்லாதவர்களுக்கு சாதிச் சான்று வழங்குவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: Online Gaming; ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறையை வெளியிட்டது மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.