ETV Bharat / state

மன்சூர் அலிகானுக்கு அபராதம் செலுத்த மேலும் 10 நாட்கள் அவகாசம்!

Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 1:46 PM IST

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்படப் பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஆனால், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு, மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மன்சூர் அலிகான் மனுவை 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல், இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செலுத்தி, அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (ஜனவரி 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மன்சூர் அலிகான் தரப்பில், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால், பெருந்தொகையான ஒரு லட்சம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, ஒருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அபராதத் தொகையை செலுத்துவதற்கு மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் மேலும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.. நடிகர் மன்சூர் அலிகான் சவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.