ETV Bharat / state

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்
author img

By

Published : Apr 26, 2022, 1:00 PM IST

சென்னை: சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கி.மீ பரப்பை புலிகள் சரணாலயமாக 2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான்காவது புலிகள் சரணாலயமான சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுவதாக கூறி, அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 51 ரிசார்ட்கள் உள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை அனுப்பியதற்கு, சத்தியமங்கலம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் பதிலளித்துள்ளனர். தேசிய வன விலங்குகள் வாரியத்திடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமோ ஒப்புதல் பெறாமல், இந்த ரிசார்ட்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறது.

வன உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ரிசார்ட்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை அலுவலர்கள் உள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து ரிசார்ட்களையும் சீல் வைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 26) விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ரிசார்ட்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும், ரிசார்ட்களை சேர்க்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அஞ்சல்துறை ஊழியரின் பணியைக் கூட செய்யாமல் இருப்பது ஆளுநருக்கு அழகல்ல - முதலமைச்சர் விமர்சனம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.