ETV Bharat / state

தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்கத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி! - சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடைகோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

dismissed
டாஸ்மாக்
author img

By

Published : May 4, 2023, 6:23 PM IST

சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணமாக மது இருக்கிறது. சமீப காலங்களில் பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்தியது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை.

சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மாணவர்கள் எளிதில் மதுவைப் பெற வகை செய்து விடும் என்பதால், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்கத் தடை விதிக்க வேண்டும். அதேபோல், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எதிராக வழக்குப் பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று(மே.4) நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், டாஸ்மாக் கடைகளுக்குள்தான் இந்த தானியங்கி விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த இயந்திரங்கள் மூலம் யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் என்ற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த தானியங்கி மது விற்பனை இயந்திரங்களில் மது பெற வருபவர்களை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது எனவும், இது சம்பந்தமாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை ஒழிப்பதே புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம்" - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

இதையும் படிங்க: The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இதையும் படிங்க: 12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ்: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு!

இதையும் படிங்க: செயற்கை முறையில் பழுக்க வைத்த 16 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.