ETV Bharat / state

மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமாக செயல்பட்ட தேர்வுக்குழு - உயர் நீதிமன்றம் கண்டனம்

மருத்துவ மேற்படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாகத் தேர்வுக்குழு செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமாக செயல்பட்ட தேர்வுக்குழு -  உயர் நீதிமன்றம் கண்டனம்
மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமாக செயல்பட்ட தேர்வுக்குழு - உயர் நீதிமன்றம் கண்டனம்
author img

By

Published : Jun 15, 2022, 9:26 AM IST

சென்னை: கடந்த 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகக் கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு? என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்  madras High Court condemns selection committee for favoring private colleges in medical education
சென்னை உயர் நீதிமன்றம்

அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம் எனவும், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி- க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ மேற்படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியதன் ஏன்?

இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு நேற்று (ஜூன்.14) வந்தது.அப்போது, செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்லூரிகள் தான் அதிக கட்டணம் வசூலித்தன எனவும் ஆனால் தேர்வுக்குழு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டை செல்வராஜனிடம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், மனுதாரர் எந்த கல்லூரிக்கும் சாதகமாகச் செயல்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த 2020ல் எந்த தவறும் நடக்கவில்லை என அறிக்கை அளித்த நிலையில், 2021ல் தவறு நடந்துள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏழு கலந்தாய்வுகள் நடத்திய நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன்? என, மனுதாரர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமாக தேர்வுக்குழு செயலாளர் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி விரைவில் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.