ETV Bharat / state

Tomato Price hike: தக்காளி லாரிகளுக்கு இடம் ஒதுக்காத அலுவலர்களுக்கு கண்டனம்

நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்காத சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tomato Price hike
Tomato Price hike
author img

By

Published : Nov 30, 2021, 1:53 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் உள்ள தக்காளி விற்பனை மைதானத்தைத் திறக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது.

அதில், கோயம்பேடு சந்தையில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை மீண்டும் திறப்பதன் மூலம் வெளிமாநிலங்களிலிருந்து தக்காளிகளை லாரியில் கொண்டுவந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய முடியும் எனக் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர். சுரேஷ்குமார், தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு சந்தையில் தக்காளிகளைக் கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு நேற்று (நவம்பர் 29) உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், இன்று (நவம்பர் 30) காலை 4 மணிமுதல் நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சிவா, நீதிமன்ற உத்தரவுப்படி கோயம்பேட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அலுவலர்கள் ஒதுக்கவில்லை என்று முறையிட்டார். நீதிமன்ற உத்தரவு குறித்து அலுவலர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து அலுவலர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.