ETV Bharat / state

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு; நீதிமன்றம் நிராகரித்தது தவறு: சசிகலா தரப்பு வாதம் - சசிகலா நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பில் வாதம்
சசிகலா தரப்பில் வாதம்
author img

By

Published : Nov 4, 2022, 8:07 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச் செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்ய கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, உச்சநீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாக குறிப்பிட்டார்

கட்சியின் உரிமை தொடர்பாக மட்டுமே சிவில் நீதிமன்றம் முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணைக்கலந்தாய்வு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.