ETV Bharat / state

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடைக்கோரி வழக்கு- ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - மூக்கணாங்கயிறு

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய- மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bullock Nose Rope
Bullock Nose Rope
author img

By

Published : Aug 19, 2021, 3:55 PM IST

சென்னை : மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய- மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மாடுகள் துன்புறுத்தல்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு போடுவதால், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Madras HC
சென்னை உயர் நீதிமன்றம்

எனவே, மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

நீதிபதிகள் கருத்து

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, “உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த, இந்த நடை முறை தான் பின்பற்றுவதாக தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம்” எனத் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக ஒன்றிய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க : பிணை கோரிய மீரா மிதுனின் வழக்கு தள்ளிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.