ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - senthil balaji surgery

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Jun 20, 2023, 11:07 AM IST

Updated : Jun 20, 2023, 1:19 PM IST

சென்னை: பணப் பரிவர்த்தனை மோசடி புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை அழைத்துச் சென்றபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில், சென்னையில் பெய்த மழை பாதிப்புகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அருகில் பக்ஷ ஆட்டுத் தொட்டி பகுதியில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “1950ஆம் ஆண்டிற்கு பிறகு 73 ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் பெரிய மழை என்ற கணக்கெடுப்பில், சென்னையில் பெய்த பெரிய மழை பாதிப்பு 16 சென்டிமீட்டர் ஆக உள்ளது. அதேபோல் 1996 ஆம் ஆண்டு 26 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்றைய முன்தினம் அதிக அளவில் மழை பாதிப்பு பதிவாகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

மழைநீர் வடிகால் பகுதியில் பெரிய அளவில் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 50 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளன. மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததால் சென்னையில் மிகப் பெரிய மழை நீர் பாதிப்பு வந்தபோதும், 22 சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்காமல் சென்றுள்ளன. முறிந்து விழுந்த மரங்களும் உடனடியாக மாநகராட்சியால் அகற்றப்பட்டுள்ளன.

குடிசைகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் நேற்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் மழை பாதிப்புகள் அதிகம் இருந்தாலும், புதுக்கோட்டையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ள இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரிப் பணிகளை பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.

திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளத் தேவையில்லை, சென்னையில் சென்று மழைநீர் பாதிப்புகளை கவனியுங்கள் என முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை வந்துள்ளோம். சென்னை சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றங்கரை ஓரம் நீர் செல்வதை ஆய்வு செய்தோம். அங்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

சைதாப்பேட்டையில் சிறிய அளவில் மூன்று, நான்கு சென்டிமீட்டர் மழை பெய்தாலும் மழை நீர் தேங்கும் இடங்களிலும் மழைநீர் தேங்கவில்லை. விருகம்பாக்கம் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் மழை நீர் தேக்கம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். ஆற்றோர குடிசைப் பகுதிகளில் தண்ணீர் வரும் என்பதால், மின்சாரத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

மழை நின்றுள்ளதால் உடனடியாக மின்சாரம் அளிக்கப்படும். கொசஸ்தலை, கோவளம் போன்ற வடிநீர் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் பெரிய அளவு பாதிப்பு இருக்கும். அது போன்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு முடிக்கப்பட்டு, ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை வந்தாலும் தாங்கும் சக்தி சென்னை மாநகராட்சி மற்றும் மழைநீர் வடிகால்கள் பெற்றிருக்கிறது என்ற நிலை உருவாக்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களில் மூன்று பிரதான ரத்த நாளங்களில் பெரிய மூன்று வகையான அடைப்புகள் இருந்தன.

உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவரை பரிசோதனை செய்ததில் ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்த மருந்தை நிறுத்திவிட்டு 5 அல்லது 6 நாட்களுக்கு பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லாவிட்டால் ரத்தப்போக்கு ஏற்படும். எனவே, நான்கு ஐந்து நாட்கள் தள்ளி வைத்தார்கள். அநேகமாக நாளை காலை அறுவை சிகிச்சை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை காலை அறுவை சிகிச்சை செய்வார்கள் என கருதுகிறோம்.

காவேரி மருத்துவமனை ஏற்கனவே சிறப்பான மருத்துவமனைதான். நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நாளை காலை எந்த மாதிரி சிகிச்சை அளிக்க உள்ளனர் என்பது எங்களுக்கும் தெரிவிப்பார்கள். ஓபன் ஹார்ட் சர்ஜரிதான் செய்ய உள்ளனர்.

நேற்று இரவு செய்த பரிசோதனையில் ரத்தப்போக்கு இருக்காது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாளை அறுவை சிகிச்சை செய்யப்படும். அமலாக்கத்துறை விசாரணைக்கும், அறுவை சிகிச்சைக்கும் சம்பந்தமில்லை. ஆகையால், நாளை அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.

அரசு மருத்துவர்கள் மூன்று அடைப்புகள் இருப்பதை கூறியவுடன், அப்போலோ மருத்துவமனை இருதய மருத்துவர் செங்கோட்டுவேல் வந்து உறுதி செய்தார். இஎஸ்ஐ மருத்துவர்களும் அதனை உறுதி செய்தனர். தமிழ்நாட்டில் 20 ஆயிரம் அரசு மருத்துவர்களும், இஎஸ்ஐயில் உள்ள மருத்துவர்களின் திறமையை சந்தேகத்திற்கு உள்ளாக்கி உள்ளார்கள். நாளை அறுவை சிகிச்சை செய்த பின்னர் அமலாக்கத் துறை என்ன செய்வார்கள் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - அமைச்சர் ரகுபதி

Last Updated : Jun 20, 2023, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.