திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராகவும், சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் இருப்பவர் மா.சுப்பிரமணியன். இவர் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னை மாநகர மேயராகவும் இருந்தவர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், சுப்பிரமணியன், அவரது மனைவிக்கு மற்றும் இளைய மகன் சு. அன்பழகன் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிண்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அன்பழகன் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். மா. சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மா. சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகனுடன் எடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், "கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் 'அன்பு'...." என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகத்தை முன்னெடுக்கும் தமிழக அரசியல்வாதிகள்...
!