சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றுவந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிர் இழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகை ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை சந்தித்து இயக்குநர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து லைகா தலைமை செயல் அலுவலர் தமிழ்குமரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லைகா நிறுவனம் சார்பில் இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படும். உயிர் இழந்த நபர்கள் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாயும், மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சைக்காக உதவித்தொகை பிரித்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி: கமல் அறிவிப்பு