ETV Bharat / state

மேதகு 66 : தமிழினத்தின் தாயுமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ! - மேதகு

காலங்காலமாகவே ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் தன்னை நிரப்பிக்கொண்டிருந்த தமிழர் கடலின் நடுவே அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறு தீவில் பல அதிசயங்களைத் தனி மனிதராக நிகழ்த்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் இன்று!

LTTE leader Prabhakaran's birthday special article
மேதகு 66 : தமிழினத்தின் ஆண் தாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
author img

By

Published : Nov 26, 2020, 9:11 PM IST

Updated : Nov 27, 2020, 11:01 PM IST

பெற்றெடுத்து அன்பு பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, உற்றார் உறவினர்களை, காதலியை உதறித் தள்ளிவிட்டு தமிழீழ விடுதலைக்காக, தமிழ் மக்களைக் காப்பதற்காக எண்ணற்ற போராளிகள் எந்த தைரியத்தில் தங்களின் உயிரைத் துறக்க துணிகின்றனர் ?

அதிலும், இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த குறிப்பிட்ட இடத்தில் தங்களது உயிரை துறக்க வேண்டுமென வரும் கட்டளைக்கு காத்திருந்து அதற்காகப் போட்டிபோட்டுக்கொண்டு வீரச்சாவை விரும்பித் தழுவ முன்வந்து நிற்கும் மனநிலையை அவர்களுக்கு எது உருவாக்குகிறது ?

காலங்காலமாகவே ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் தன்னை நிரப்பிக்கொண்டிருந்த இந்து மாகடல் எனும் தமிழர் கடலின் நடுவே அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறு தீவில் இந்த அதிசயத்தைத் தனி மனிதராக நிகழ்த்திய அவர் யார்? அவருக்கும், அவரின் சொல்லுக்கும் ஏன் இத்தனை மரியாதை ?

இருக்கிறாரா ? இல்லையா ? என உறுதியாகக் கூற முடியாத அந்த மனிதனை எதன் பொருட்டு உலகத் தமிழர்கள் தெய்வம் போல கொண்டாடித் தீர்க்கிறார்கள் ?

தீவிரவாதி - பயங்கரவாதி என எதிர்ப்பாளர்களால் விமர்சிக்கப்படும் அவரை இன்னொரு பக்கம் ஒழுக்கசீலர், நேர்மையாளர், அறவாழ்வு வாழ்ந்தவர் என உலகமே கண்டு வியந்துகொண்டிருக்கிறது.

LTTE leader Prabhakaran's birthday special article
அறிவுச்சோலைக் குழந்தைகளுடன் தமிழீழ தேசிய தலைவர்

அவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

கெரில்லாப் போராட்டம் - உள்நாட்டு போர் - முப்படை கொண்ட விடுதலை இயக்கம் - தற்கொலைத் தாக்குதல் என இத்தனை சொற்களோடு தொடர்புடையவராக அவரை சர்வதேசம் அடையாளப்படுத்தினாலும், அவரை நிறைவாக கண்டறிய அவரது தலைமையிலான தன்னாட்சி தமிழீழ அரசு (de facto state) குறித்தும் அதன் மக்கள் நல செயல்பாடுகள் குறித்தும், அதனை அவர் செழுமைப்படுத்திய ஆற்றல் குறித்தும் நாம் அறிய வேண்டியது அவசியம். அதனையே இந்த கட்டுரை வாயிலாக வெளிக்கொண்டுவர முயல்கிறோம்.

இலங்கையில் அமைதியைக் கொணர விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் - ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நார்வே அரசு சமாதானம் பேசிவந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த ஒப்பந்த காலம். தமிழீழ இனப்படுகொலைக்கான களத்தை சத்தமில்லாமல் சிங்கள அரசு தயார்படுத்திக்கொண்டிருந்தது.

அந்த காலக்கட்டத்தில்தான் டிசம்பர் 25 ஆம் தேதியன்று சுனாமி எனும் ஆழிப் பேரலை அந்த சின்னஞ்சிறு தீவை பதம் பார்த்தது. குறிப்பாக, கடல் நீரையொற்றி இருந்த தமிழீழ (வட கிழக்கு) நிலபரப்பில் ஏறத்தாழ 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர் பறிப்போனது. வல்லாதிக்க நாடுகளின் முழு உதவிகளைப் பெற்ற வளரும் நாடுகள் கூட மீட்புப்பணிகளை நெறிப்படுத்த முடியாமல் திணறின. என்ன செய்வதென அறியாத இந்தியா போன்ற நாடுகள் முதல்நாள் வெறுமனே சோக இசையை ஒலிபரப்பிக்கொண்டிருந்தன.

அப்போது, தெற்காசிய கண்டத்தில் முதல்முதலாக ஆழிப்பேரலை பேரிடர் மீட்புப் பணியைத் தொடங்கியது விடுதலைப் புலிகள் இயக்கம். “இறைவனை மறந்ததால் ஏற்பட்ட தெய்வகுற்றம்” என கொழும்பு வானொலி தன் மூடத்தனதை பரப்பிக்கொண்டிருந்தபோது, “ஓலத்துடன் ஒப்பாரியெழுப்புவதால் ஒன்றும் மாறாது, தேசத்தை மீட்க களப்பணியே தேவை” என்றது புலிகளின் குரல் வானொலி. அது தான் பிரபாகரனின் தலைமை. நம்பிக்கை துளிர்க்க அடுத்தடுத்த நாள்களில் புலம் - களம் என்ற உறவுப்பால இணைப்புகளுடன் தமிழீழ மானுடம் கொஞ்சம் கொஞ்சமாக நிமிரத் தொடங்கியது. சின்னஞ்சிறிய தமிழீழத்தின் துயர் துடைக்க உலகம் முழுவதும் பரவி இருந்த ஏதிலித் தமிழர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.

அடுத்தவர்களுக்காகக் காத்திராமல் தாயைப்போன்ற தலைவனின் வழிநடத்தலில் போராளிகள் அவசரகட்ட நடவடிக்கைகளில் நகர்த்தப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட கடற்கரையோரப் பிரதேசங்களில் மருத்துவப்பிரிவுப் போராளிகளின் தொற்றுநோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை செழுமைப்படுத்தினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மழலைகளுடன் மழலையாக

மரணித்த உயிர்களை நாறும் பிணங்களாக அருவருப்போடு எண்ணிக் கணக்கிட்ட ஏனைய நாடுகளுக்கு மத்தியில், நாடாக அங்கீகரிக்கப்படாத தமிழீழமும் அதன் தலைமையும் அவர்களுக்கு உரிய இறுதி மரியாதையை செய்தது. வலிகளை மட்டுமே கண்ட ஈழத்தமிழினம், தங்களை அடக்கி ஒடுக்கி படுகொலை செய்த சிங்கள தேசத்தின் ராணுவத்திற்கு நட்புக்கரம் நீட்டியது. சிங்கள மக்களுக்கு உதவியது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?. அதனை செய்து மானிதாபிமானத்தின் உச்சத்தை தொட்டார் பிரபாகரன். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக அடுத்தகட்ட வாழ்க்கைக்குத் தம்மைத் தயாராக்கினர்.

சுனாமி அடித்த சில மாதங்களுக்குள்ளேயே தமிழர்கள் அதிலிருந்து மீள தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான செயல்களையும் விடுதலைப் புலிகள் நடைமுறைப்படுத்தினர்.

முதற்கட்டமாக பெற்றோரை இழந்த சிறார்களுக்காக சிறுவர் இல்லங்கள் திறக்கப்பட்டன. ஆழிப்பேரலையை நேரடியாகக் கண்ட சிறார்களின் உள நல மேம்பாடு கருதி, மனவள பயிற்சிகள் வழங்கப்பட்டன. முழுநீளக் கார்ட்டூன் படங்கள் குறுகிய காலத்திலேயே தமிழிற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு, பிள்ளைகளுக்குப் பயன்படக்கூடிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

அனைவரும் நீச்சல் ஆற்றல் உள்ளவர்களாக இருந்திருந்தால் உயிரிழப்புகளை ஓரளவு குறைத்திருக்கலாம் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விருப்பம், வள்ளிபுனம் என்ற பகுதியில் செயல்வடிவம் பெற்றது. வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்ற மேம்பட்ட வசதிகளுடன் கூடிய நீச்சல் தடம் திறந்துவைக்கப்பட்டது.

மின்சாரம் கூட தடை செய்யப்பட்டிருந்த புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், உடலளவில் வளர்ச்சி குன்றி இருந்த குழந்தைகளுக்கென சத்தான உலகத் தரம் வாய்ந்த உணவு வகைகள் வந்தடைந்தன.

ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட வாழ்விலான வெற்றியானது இனத்தின் ஒட்டுமொத்த கூட்டு வெற்றிக்கும், ஒட்டுமொத்த வெற்றியானது தனிப்பட்ட வெற்றிக்கும் வலுச்சேர்க்கும் என்ற யதார்த்த உண்மையை அதிகம் நம்பிய அவர், ஐந்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பன்மொழி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டார். போர் ஆரம்பிக்கும்வரை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களின் விருப்பங்களை, கனவுகளை, எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து, வாழ்ந்தவராகவே அம்மக்களால் மதிக்கப்படும் அவரது அடுத்த கனவும் தனது நாட்டின் இளம் தலைமுறையை பற்றியதாகவே இருந்துள்ளது.

அப்போது, தமிழீழப் பகுதியில் இயங்கிவந்த பள்ளிகளில் கல்வியானது ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்துள்ள ஆற்றலை இனங்கண்டுகொள்ளவோ, வளர்த்தெடுக்கவோ உதவுவதில்லை என நினைத்த அவர், அறிவியற் கழகம் ஒன்றை உருவாக்கினார். விசுமடு என்ற பகுதியில் மிக விரைவாக பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மையத்தில் இலத்திரனியல் கணினியம், இயந்திரவியல், பௌதீகவியல், ஆங்கிலம் என வெவ்வேறு துறைகளுக்கென ஆய்வுக்கூடம், நூலகம், வகுப்பறை, துறைசார் அறிஞர்களின் வழிநடத்தல்களுடன் கற்பிக்கப்பட்டது.

மேதகு 66 : தமிழினத்தின் தாயுமானவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
தாயுமானவனான பிஞ்சு குழந்தையும் பேசும் பேரன்பாளன்

2004 ஆம் ஆண்டின் இறுதியில், ஐ.நா சபை உலக மொழிகளில் விரைவில் அழியவுள்ள மொழிகளின் பட்டியலில் தமிழை இணைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த தகவல் பிரபாகரனின் தலைமையகத்தை அடைந்ததுதான் தாமதம். உலக தமிழ் மானுட கூடல் எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தமிழின மொழி பண்பாட்டு ஆளுமைகளை, அறிவர்களை தமிழீழ நடைமுறை அரசின் தலைநகரான கிளிநொச்சிக்கு அழைத்து சந்தித்தார்.

அவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், பொறியியல், மருத்துவம், கட்டடவியல், சட்டம், கணக்கியல், அறிவியல், வரலாறு, மானுடவியல், தொல்லியல் என் பல்வேறு துறைசார்ந்த சொற்களை தமிழாக்கம் செய்து, சொற்களஞ்சியமாக உருவாக்க ஆணையிட்டார். இதற்காக அறிவர் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த சொற்களஞ்சியம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழர்களால் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இனிவரும் காலம் தொழிற்நுட்ப யுகத்தால் மட்டுமே வழிநடத்தப்படும் என கணித்த தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் தொலைநோக்கு பார்வை, கன்னித் தமிழை கணினி மொழிக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வைத்தது.

கணினித் திரையை சீர்பார்க்கும் அரசியல் பிரிவப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்

உலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுநர்கள், தமிழ் வல்லுநர்களை சந்தித்தார். தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினார். தமிழும் தமிழர் சார்ந்த எல்லா விடயங்களுமே அங்கே அலசப்பட்டன. அதன் பயனாய், ஆதமி போன்ற மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. அடுத்தகட்ட வளர்ச்சியாக, தமிழ் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாய், நேரடியாகவே தமிழைக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதி ஏற்பட்டது. உலகளவில், கணினி பயன்பாட்டு மொழியில் தமிழ் இன்று நிலைத்திருப்பதற்கும் ஈழத்தமிழர்களை வழிநடத்திய அவரது மொழிப்பற்று முதன்மை பங்கு வகித்தது.

இதுவரை உலகில் தோன்றிய போராளிகளிலேயே அதிகம் பேசாதவராக அறியப்படும் அவர், ஆற்றல்மிகுந்த செயற்பாடுகளினூடாக சிந்தனையை செயல்படுத்திய முறையிலேயே தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 30 ஆண்டுகால அவரது போராட்ட வாழ்வை ‘தமிழினத்தின் தன்னெழுச்சிக் காலம்’ எனலாம்.

மேதகு 66 : தமிழினத்தின் ஆண் தாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
மேதகு 66 : தமிழினத்தின் ஆண் தாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் !

பத்து மாதம் ஒரு பிள்ளையைச் சுமந்து ஈன்றெடுப்பவள் தாய் ஆகின்றாள். அவளது தாய்மை அவள் ஈன்றெடுத்த பிள்ளைக்கு என்ன தேவை என்பதை உணர வைத்தது. இது இயற்கையான பிணைப்பு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் எதிர்காலத்திற்காகத் தன் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்து நின்ற பிரபாகரன், இங்கு அந்த தாயிக்கும் மேலானவராக மாறி நிற்கிறார். அவரது தலைமையும் தாய்மை போன்றதுதான். அதனால்தான் அவரை உலகத் தமிழினம் தாயுமானவராக போற்றுகிறதோ என்னவோ ?!.

Last Updated : Nov 27, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.