ETV Bharat / state

லிவ் - இன் உறவில் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள் தீக்குளிப்பு - லிவ்-இன் உறவில் இருந்த காதலர்கள் தீக்குளிப்பு

சென்னையில் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலர்கள் தீக்குளிப்பு
காதலர்கள் தீக்குளிப்பு
author img

By

Published : Feb 12, 2022, 10:26 PM IST

சென்னை: சூளை நெடுஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின் (40). இவர் சவுகார்பேட்டையில் தனது தந்தையின் துணிக் கடையில் பணியாற்றிவந்தார். சந்தீப் ஜெயின், இளைச்சி (35) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்துவந்தார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 12) மாலை மூன்று மணியளவில் சந்தீப் ஜெயின் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய மணீஷ் என்பவரை அலைபேசியில் தொடர்புகொண்டு தீக்குளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

உடனே, மணீஷ் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இளைச்சி தீயில் கருகியும், சந்தீப் ஜெயின் 60 விழுக்காடு தீக்காயத்துடனும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சந்தீப் ஜெயினை மீட்டு சிகிச்சைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், தீயில் கருகி உயிரிழந்த இளைச்சியின் சடலத்தை உடற்கூராய்விற்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.