சென்னை வடபழனியிலிருந்து சரக்கு லாரி ஒன்று கோயம்பேடு மார்கமாக செல்லும் பிரதான சாலை மேம்பாலத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநர் லாரியை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த இரு கார்களின் மீது மோதியது. இறுதியாக ஒரு காரின் பக்கவாட்டில் மோதி லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து வடபழனி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுபாடை இழந்து லாரி சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.