சென்னை: தாம்பரத்திலிருந்து கிண்டி நோக்கி பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அதிவேகமாகச் சென்றுள்ளது. விமான நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் தலைக்கவசம் விற்பனை செய்யும் நபர் மீது மோதி, சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் இடித்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரியின் அடியில் சிக்கிய ஹெல்மெல்ட் வியாபாரி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு காவலர்கள் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை, பணம் கொள்ளை