ETV Bharat / state

நீளமான சித்திரம் வரைந்து கின்னஸ் சாதனை பெற்ற ஈரோட்டு மங்கை - நடிகர் சிவக்குமார் மோன்ஸ் செல்வம்மினை வாழ்த்து

சென்னை: ஈரோட்டைச் சேர்ந்த மோன்ஸ் செல்வம்மின் உலகிலேயே மிக நீளமான சித்திரம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கின்னஸில் இடம்பெற்ற மோன்ஸ் செல்வம்மின்
author img

By

Published : Sep 21, 2019, 6:02 PM IST

சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஈரோட்டைச் சேர்ந்த மோன்ஸ் செல்வம்மின் என்பவர் பல அழகிய காட்சிகளை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து கின்னஸ் சாதனைக்கு வித்திட்டுள்ளார். சுமார் 351.70 மீட்டர் நீளத்தில் இவர் வரைந்த சித்திரத்தை கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு ஆஃப் காமிக்ஸ் 'ட்ரிப்' என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளது.

இதனை அங்கீகரித்து கின்னஸ் ரெக்கார்டு சார்பில் இந்தியாவின் பிரதிநிதியான விவேக், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களை அவருக்கு வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் மோன்ஸ் செல்வம்மினை வாழ்த்தி பேசினார்.

மோன்ஸ் செல்வம்மின் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு

மேலும் ஓவியக்கலையில் உள்ள சிரமங்களையும் ஓவியக் கலையை பிரதானமாகக் கொண்டவர்கள் குறித்தும் பேசிய அவர் ஓவியக் கலையை பிரதானமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்று தனது மன வருத்தத்தையும் பதிவு செய்தார். பின்பு அடுத்த ஜென்மத்தில் ஒரு நடிகராக பிறக்காமல் ஒரு ஓவியனாக பிறக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:

31 உலக சாதனைகள் படைத்த ஒன்பது வயது சிறுமி!

காஷ்மீர் முதல் குமரி வரை மாரத்தான் ஓட்டம் - சாதித்த ராஜஸ்தான் பெண்!

பிளாஸ்டிக் விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை முயற்சி; மாற்றுத்திறனாளிகள் அசத்தல்!

Intro:உலகின் மிக நீளமான சித்திரம் வரையும் சாதனையை தமிழகத்தை சேர்ந்த பெண் நிகழ்த்தியுள்ளார்.Body:ஈரோட்டைச் சேர்ந்த மோன்ஸ் செல்வம்மின் சிறுவயதில் தனது கிராமத்தில் கண்ட பல அழகியல் மற்றும் கிராமத்தின் பசுமையான நினைவுகளை கார்ட்டூன் ஓவியமாக வரைந்துள்ளார். இதையே கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு ஆப் காமிக்ஸ் ட்ரிப் என்ற தலைப்பில் (ஏற்கனவே 297 புள்ளி 50 மீட்டர் இத்தாலி சாதனையை முறியடித்தார் )351.70 மீட்டர் நீளமான சித்திரத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை முயற்சியை இன்று சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் நிகழ்த்தினார். இதனை அங்கீகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களை கின்னஸ் ரெக்கார்டு சார்பில் இந்தியாவின் பிரதிநிதியான விவேக் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகுமார்
மோன்ஸ் செல்வம்மினை வாழ்த்தி பேசினார் அப்பொழுது ஓவியக்கலையில் உள்ள சிரமங்களையும் ஓவியக் கலையை பிரதானமாகக் கொண்டவர்கள் குறித்து பேசினார் மேலும் கலையை பிரதானமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு ஓவியத்துறை மதிப்பு உள்ளது என்று மன வருத்தத்தை பதிவு செய்தார். பிஎன் ஆக நான் இருந்திருந்தால் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் சிறு வயதிலேயே அழைத்துக் கொண்டேன் அதன் பிறகுதான் நடிப்புத் துறைக்கு வந்தேன் இருப்பினும் நான் அடுத்த ஜென்மத்தில் ஒரு நடிகராக பிறக்காமல் ஒரு ஓவியனாக பிறக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று தெரிவித்தார்

Conclusion:வீடியோ மோஜோ வில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.