ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சர், அமைச்சர், எம்பி, எம்எல்ஏ.,க்கள், பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு 2014இல் ஏற்படுத்திய விசாரணை மன்றமே, 'லோக் ஆயுக்தா' அமைப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, சென்னை சேப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையின் முதல் தளத்தில், லோக் ஆயுக்தா அமைப்பு வாடகைக்கு இயங்கி வந்தது. தற்போது, அந்த அமைப்பு சென்னை கிண்டி திவிக தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கட்டட வளாகத்தின் 6, 7 ஆவது தளத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.
தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கென தனியாக அலுவலகம் இல்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு வந்து நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் லோக் ஆயுக்தாவிற்கு நேரடியாக மனு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லோக் ஆயுக்தா உறுப்பினர் தேர்வில் முறைகேடு ஏதும் இல்லை - தமிழ்நாடு அரசு