தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்திற்காக நான்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாக பிரித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையொட்டியுள்ள 4 மாவட்டங்கள் மற்றும் 23 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு, பாதிப்பு அதிகமுள்ள கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மாவட்டங்களுக்குள் 50 சதவீத பயணிகளுடன் பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி.
வழிகாட்டு நெறிமுறைகளுடன் குளிர்சாதன வசதி இல்லாமல் பேருந்து இயங்க அனுமதி.
மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி.
திருமண நிகழ்வுகளுக்கு 27 மாவட்டங்களில் இபாஸ் பெற்று பயணம் செய்யலாம்.
அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.