ETV Bharat / state

ஆறுகளில் மாசு குறைந்தது - தொழிற்சாலைகள் அனைத்து மூடப்பட்டுளதால் ஆறுகளில் மாசு குறைவு

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுளதால் அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் மாசு குறைந்துள்ளது.

water
water
author img

By

Published : Apr 18, 2020, 5:10 PM IST

கரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் பள்ளி, கல்லூரி, பூங்கா, வணிக வளாகம், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர்.

ஊரடங்கு காரணத்தால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ’கெட்டதிலும் ஒரு நல்லது’ என்ற பழமொழிக்கேற்ப இந்த ஊரடங்கு உத்தரவால் சமூகத்துக்கு பல நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, குற்றங்கள் குறைந்திருப்பது மனிதாபிமானம் அதிகரித்திருப்பது போன்ற நன்மைகளும் நடந்துள்ளன. அதில் ஒன்று தான் ஆறுகள் மாசு அடைவது வெகுவாக குறைந்துள்ளது.

ஆறுகளில் குறைந்த மாசு
தொழிற்சாலைக் கழிவுகள், தேவையற்ற பொருள்களை ஆற்றில் கொட்டுவது ஆகியவை வழக்கமான நிகழ்வாக இருந்தது. இதனால் அடையாறு, ஆறாக இல்லாமல் சாக்கடையாக மாறியது. இப்பொழுது ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், தொழிற்சாலைக் கழிவுகள் அடையாறில் கலப்பதில்லை. மக்களும் குப்பைகளை குப்பை தொட்டியில் அல்லது குப்பை வண்டியில் போடுகின்றனர்.
இதனால் அடையாறு முன்பை விட சிறிது புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதே நிலை எதிர் காலத்தில் தொடர்ந்தால் அல்லது தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடு விதித்தால் அடையாற்றின் தரம் உயரும் என்றும், 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல பழைய நிலைக்கு அடையாறு மாறிவிடும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய 7 வயது சிறுவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.