அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 13ஆம் தேதி வரை நடக்கிறது.
இரண்டாம் நாளான இன்று திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை உள்ளிட்ட 14 அதிமுக மாவட்டத்துக்குக் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் அதிமுக தலைமைக் முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்களை வெற்றி பெற செய்ய வைப்பதாகக் கூறி, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு திமுகவினரை வெற்றிபெறச் செய்ய வைத்ததாகக் குற்றம் சாட்டி, திடீரென்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து கட்சியினர் வந்து சமாதானப்படுத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அதிமுக தலைமையகத்தில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சாட்சி விசாரணை தொடங்கியது