சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு தவிர்த்து தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டது. அதன்படி, கடந்த 31ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாலை அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 6ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று (செப்.13) மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாலை 5 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நகைக்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!