தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்னும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களுக்கு செப்டம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
இச்சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றனர்.
தனித்தனியாக ஆலோசனை
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் தொடங்குகிறது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அதிமுக தலைமை, வரும் 8ஆம் தேதிவரை ஒவ்வொரு மாவட்டச் செயலாளருடனும் தனித்தனியாக ஆலோசிக்கின்றது.
இதையும் படிங்க: 'மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பே இல்லை'