தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 78 ஆயிரத்து 526 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 ஆயிரத்து 769 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஏழு நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இன்று (செப்.07) கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் 52 லட்சத்து 4 ஆயிரத்து 757 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் வைரஸ் தொற்றால் 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 51 ஆயிரத்து 215 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் பூரண குணமடைந்து 5 ஆயிரத்து 930 நபர்கள் இன்று(செப்.07) வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 116ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி மேலும் 89 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் 7 ஆயிரத்து 925ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு:
- சென்னை - 1,42,603
- செங்கல்பட்டு - 28,641
- திருவள்ளூர் - 26,559
- கோயம்புத்தூர் - 19,479
- காஞ்சிபுரம் - 18,501
- மதுரை - 14,881
- கடலூர் - 14,458
- விருதுநகர் - 13,348
- தேனி - 13,246
- சேலம் - 12,839
- திருவண்ணாமலை - 11,963
- தூத்துக்குடி - 11,829
- வேலூர் - 11,815
- ராணிப்பேட்டை - 11,441
- திருநெல்வேலி - 10,396
- கன்னியாகுமரி - 10313
- விழுப்புரம் - 8534
- திருச்சிராப்பள்ளி - 8,235
- தஞ்சாவூர் - 7,572
- திண்டுக்கல் - 7,414
- கள்ளக்குறிச்சி - 7,154
- புதுக்கோட்டை - 6,769
- தென்காசி - 5,877
- ராமநாதபுரம் - 5,007
- திருவாரூர் - 4,361
- சிவகங்கை - 4,297
- ஈரோடு - 3,959
- திருப்பூர் - 3,653
- நாகப்பட்டினம் - 3,389
- திருப்பத்தூர் - 3,289
- அரியலூர் - 3,099
- நாமக்கல் - 2,711
- கிருஷ்ணகிரி - 2,632
- நீலகிரி - 1,933
- கரூர் - 1,899
- தருமபுரி - 1,501
- பெரம்பலூர் - 1,431
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 922
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 878
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்