ETV Bharat / state

காவல் துறை உதவியோடு களைகட்டிய மது விற்பனை! - காவல் துறையினர் உதவியோடு மது விற்பனை

சென்னை: நேற்று ( அக். 2 ) டாஸ்மாக், பார்களுக்கு விடுமுறை என அரசு அறிவித்த நிலையில், அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் காவல் துறையினர் உதவியோடு மது விற்பனை களைகட்டியது.

மது விற்பனை நடைபெற்ற டாஸ்மாக்
மது விற்பனை நடைபெற்ற டாஸ்மாக்
author img

By

Published : Oct 3, 2020, 10:52 AM IST

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கிவரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலிலுள்ள பார்கள் உள்ளிட்டவைகள் அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும் என்றும், அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசு சார்பாக உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், சென்னையில் நேற்று (அக்.2) டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தபோதிலும் மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடந்தது. சென்னையின் கொரட்டூரைச் சுற்றியிருக்கும் மதுபான கடைகளில் விடுமுறை நாளன்று சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை நடந்துள்ளது.

பல கடைகளில் காலை 7 மணி முதலே குடிமகன்கள் திரண்டுவந்து, மது பானங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கொரட்டூர் காவல் நிலையம் அருகேவுள்ள ராயல் பார் ஒன்றில் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் மது விற்பனை நடந்துள்ளது. மேலும் காவல் துறையினர் உதவியோடு, அங்கு மது விற்பனை களைகட்டியுள்ளது. நேற்று மட்டுமின்றி பிற நாள்களிலும் இந்த கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மது விற்பனை நடைபெற்ற டாஸ்மாக்

மேலும், மதுபிரியர்கள் காலை நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும்கூட குடித்துவிட்டு அப்பகுதி மக்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். கரோனா காரணமாக பார்கள் திறக்கப்படாத நிலையில், இந்த பாரில் எப்படி மது விற்பனை நடைபெற்றது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து காவல் துறை உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காய்கறி கடையில் மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.