ETV Bharat / state

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்காலத் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர்கள் ஆகியவற்றிற்கான ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஆயுட்கால தடையும் விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி
ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி
author img

By

Published : Sep 19, 2021, 9:24 PM IST

சென்னை: முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர் நிலை 1 ஆகிய பணியிடங்களில் 2 ஆயிரத்து 207 நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தப் பணிக்கு http://trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பம் நேற்று(செப்.18) தொடங்கியது. அக்டோபர் 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடக்ளுக்கான எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நவம்பர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்ப பதவி, சான்றிதழ் பதிவேற்றம், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக்கப்பட்ட எழுத்துத் தேர்வு விதிமுறைகள்

  • ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் கணினி வழி தேர்வினை எழுத தயாராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே அதற்கான சான்றிதழ் சரிபார்த்தப்பின் அவர்களுக்கு அருகாமையில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.
  • தேர்வர்களுக்கு தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

தேர்வு மையம் மாற்றப்பாடாது

  • தேர்வு மைய விவரத்துடன் கூடிய அனுமதிச்சீட்டு தேர்வர்களுக்கு இணையவழி மூலமாக மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தை மாற்றும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வர்கள் கவனத்திற்கு

  • தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக நடக்கும் தேர்வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்தவொரு தேர்வுகளிலும் கலந்துகொள்ள தடை விதிக்கப்படும். மேலும் ஆயுட்கால தடை விதிக்கவும் ஏதுவாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு - மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.