சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA)அறிவிக்கை 2020 வரைவை இறுதி செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மையை சமூக அமைப்புகள் கோருகின்றன.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்த EIA 2020 வரைவு அறிவிக்கை பொதுமக்களால் பகிரங்கமாக நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA)அறிவிக்கை விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் 30க்கும் மேற்பட்ட திருத்தங்களை வெவ்வேறு வகையாக அறிமுகப்படுத்தி உள்ளது ஒன்றிய அரசு.
இந்த அறிவிக்கை 2020 வரைவை இறுதி செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மை கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு 100-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.
இதையும் படிங்க: சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - வேல்முருகன்