சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் தேவை, பரந்தூர் விமான நிலையம் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவாகும், அதற்கு நிலம் மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்குகிறது. விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வரும் 30ஆம் தேதி ஆர்ப்பாட்டம் 150 இடங்களில் நடைபெறும் என கூறினார்.
மேலும் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வரும் 30 ஆம் தேதி 150 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை என முத்தரசன் குற்றம் சாட்டினார்.
வருமானத்தை அதிகரிக்காத நிலையில் விலைவாசி உயர்வால் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வர முயற்சிகிறது. மின் துறை அரசாங்கத்திடம் வந்த பின்னர் தான் கிராமங்களில் தெரு விளக்கு, குடிசை வீடுகள், விவசாயிகளுக்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் தனியாரிடம் சென்றால் கட்டணம் கடுமையாக உயர்ந்து விடும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களை தன்னந்தியாக உயர்த்து போன்று மின்சாரமும் மாறிவிடும், இதனை மத்திய அரசு வைவிட வேண்டும். வலுக்கட்டாயமாக மின்சார சட்ட திருத்த கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு சென்றால் இலங்கையில் ஏற்பட்டது போன்று இந்தியாவிலும் ஏற்படும். தமிழ்நாட்டிலும் மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். நீர்நிலைகளில் உள்ள வீட்டு மனை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடும் மதுரை உயர்நீதிமன்ற கிளையே ஏரியில் மீது சேரை போட்டு தீர்ப்பு சொல்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம், சிபிஐ, சிபிஎம், பாஜக, சிவாஜி வீடு உள்ளிட்ட அனைத்தும் நீர் நிலையில் இருந்த இடத்தில் தான் இன்று மாறி விட்டது, ஆகையால் தான் எங்கள் அலுவலக கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருக்கும். இன்று இவற்றையெல்லாம் அகற்ற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் தேவை, பரந்தூர் விமான நிலையம் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவாகும், அதற்கு நிலம் மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்குகிறது. 3.5 மடங்கு இழப்பீடு தரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் பொது மக்களை தமிழ்நாடு அரசு நேரில் சந்திக்க வேண்டும் என கூறிய அவர் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்த்தது, இன்றும் எதிர்க்கும் எனவும் இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியது தனக்கு தெரியாது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி